10 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் நடிகை காம்னா..
Tamil Actress
By Yathrika
காம்னா
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் சில படங்களே நடித்தாலும் மக்களின் கவனத்தை பெற்றவர் நடிகை காம்னா.
ஜெயம் ரவியுடன் இதயத் திருடன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்தவர் 2015ம் ஆண்டு சந்திரிகா என்ற படம் நடித்தார், அதுவே கடைசி.
அதன்பின் குழந்தைகள் பிறக்க அவர்களை கவனித்து வந்தார். தற்போது நடிகை காம்னா மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் உருவாகி இருக்கும் கேராம்ப் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.