விஜய்யின் முதல் காதலி யார்-னு எனக்கு தான் தெரியும்!! உண்மையை கூறிய நடிகை கெளசல்யா..
தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கௌசல்யா, நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, என்னுடைய கருத்துக்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை.
ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார். ஆனால் சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. படங்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை அதிகம் ஆகிவிட்டது.
இந்த விஷயத்தால் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடித்த ’பிரியமுடன்’ எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா கூறியுள்ளார்.
மேலும் படப்பிடிப்பில் விஜய்யுடன் நான் நிறைய உரையாடி இருக்கிறேன். விஜய்யின் முதல் காதலி யார் என்று எனக்கு தான் முதலில் தெரியும் என்றும் கடைசியாக அவரையே விஜய் திருமணமும் செய்து கொண்டதாகவும் கெளசல்யா தெரிவித்திருக்கிறார். விஜய், தன் மனைவி சங்கீதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை கெளசல்யா இப்படி குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.