கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல, நிஜ வாழ்க்கையில்.. உண்மையை உடைத்த சுகன்யா
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சுகன்யா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார்.
சுகன்யா கடந்த 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுகன்யா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுகன்யா, நடிகர் கவுண்டமணி பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், "சினிமாவில் பாக்குற மாதிரி இல்ல, கவுண்டமணி சாருக்கு சினிமாவை பற்றி அப்படியொரு அபாரமான அறிவு உள்ளது. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார். என்னையும் சில படங்களை பார்க்குமாறு அறிவுரை கூறுவார்".
"சினிமாவில் அறிமுகம் ஆன சமயத்தில் என்கிட்ட வாம்மா..வாம்மா'னு நல்லா பழகுவாரு. எனக்கு அவர் உடன் சேர்ந்து நடிக்க ரொம்ப பிடிக்கும்" என்று சுகன்யா கூறியுள்ளார்.
You May Like This Video