சுருங்கிப்போன முகம்!! ஆள் அடையாளம் தெரியாமல் போன 45 வயது சீரியல் நடிகை காவேரி..
Serials
Tamil TV Serials
Tamil Actress
By Edward
1990ல் இயக்குனர் ராதா பாரதி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வெளியான படம் வைகாசி பொறந்தாச்சு. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் மாடல் நடிகை காவேரி.
இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த காவேரி, சேதுபதி ஐபிஎஸ், படிக்கிற வயசுல போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பின் 1995க்கு பிறகு படங்களில் வாய்ப்பில்லாமல் சின்னத்திரை சீரியல் வாய்ப்புகளை பெற்று வந்தார்.
மெட்டி ஒலி, அரசி, மீரா, வம்சம், காயத்ரி போன்ற சீரியல்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். 2013ல் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்து இருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் முகம் சுருங்கி 45 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் காணப்பட்டுள்ளார். அவரின் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.