நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழில் 2015ல் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் அவர் நடித்த ஒருசில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதால் ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனத்தையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் கீழே இறங்க காரணமாக அமைந்தது. தற்போது தசரா, போலோ சங்கர், மாமன்னன், சைரன், ரகுதாதா, ரிவால்வர் ரிதா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரெஷ் சமீபகாலமாக கிளாமர் பக்கம் சென்று வாய்ப்பிளக்கும் ஆடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
தற்போது மும்பைக்கு நெருங்கிய தோழிகளுடன் சென்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இறுக்கமான மேலாடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.