சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..
Keerthy Suresh
Tamil Actress
Actress
By Edward
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்கார், அண்ணாத்த, சாணிக் காயிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் திரையில் வரவிருப்பதால் அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.





