அந்த விஷயத்தில் நடிகர் விஜய் தான் பெஸ்ட்.. நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!
தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் விரும்பி நடிக்கும் இவர், தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் சுமன் குமார் இயக்கியுள்ள இந்த படம் ஹோம்பலே பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் தீவிரமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷிடம், நடிகர் தனுஷ் சிறந்த டான்ஸரா? நானி சிறந்த டான்ஸரா? என கேட்க, தனுஷ் தான் என்று பதில் சொன்னார்.
அதன் பின், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என ஒவ்வொரு நடிகராக மாற்றிக் கொண்டே வந்தார். கடைசியில் விஜய்யா? இல்லை சிரஞ்சீவியா என்று கடைசியாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கீர்த்தி சுரேஷ், சற்றும் யோசிக்காமல் விஜய் தான் பெஸ்ட் டான்ஸர் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
