இப்படியெல்லாம் செய்யலாமா, சாபமா, வரமா.... சோகத்தில் கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh
By Yathrika
கீர்த்தி சுரேஷ்
சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் படு மோசமாக உடை அணிந்த பெண்ணின் முகத்தை நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகமாக மாற்றி ஒரு மோசமான வீடியோ வெளியாகி இருந்தது.
அவரை தொடர்ந்து நடிகை கத்ரீனாவின் புதிய பட போட்டோவை வைத்து மோசமாக எடிட் செய்தி வெளியிட்டார்கள். ராஷ்மிகா வீடியோ மற்றும் கத்ரீனா புகைப்படம் வைரலாக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.
இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ், போலி வீடியோ விவகாரம் அச்சத்தை தருகிறது. சமூக வலைதளங்களில் அன்பு, நேர்மறையான விஷயம், எச்சரிக்கை பதிவுகள், புதிய தகவல்கள் தான் பகிர வேண்டுமே தவிர, இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது வரமா, சாபமா தெரியவில்லை என சோகமாக பேசியுள்ளார்.