ரஜினி படத்தில் ஏண்டா நடித்தோம்னு இருந்தது.. பிரபல நடிகை குஷ்பு பேட்டி!!
80, 90 களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழ் படங்களை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் குஷ்பு, சமீபத்தில் அவரது கணவர் சுந்தர் சி இயக்கியிருந்த அரண்மனை 4 படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் உடன் அண்ணாத்தே படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "ரஜினியின் 'அண்ணாத்தே' படத்தில் 'ஏண்டா நடித்தோம்' என எனக்கு தோன்றியது என்று சமீபத்திய பேட்டியில் குஷ்பு கூறியுள்ளார்.
அந்த படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடி யாரும் இல்லை, பிறகு இயக்குனர் ஒரு டாப் ஹீரோயினை கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு ஜோடியே இல்லை. அதனால் கதையை கேட்டு, என்னுடைய கதாபாத்திரமும் மீனாவின் கதாபாத்திரமும் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என நம்பி நடித்தோம். ஆனால் அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
