அந்த டைரக்டர் அதுக்கு கூப்பிட்டார், அது பண்ணிதான் சினிமாவில் வந்தேன்!! வெளிப்டையாக பேசிய லட்சுமி மேனன்..
ஒரு காலத்தில் பிஸி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், சசி குமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுக்க இதைத்தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், மிருதன்போன்ற ஹிட் படஙக்ளில் நடித்தார். கடைசியாக லட்சுமி மேனன் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்து இருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சுமி மேனன், தான் எப்படி சினிமாவில் அறிமுகமானேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, "நான் திரைத்துறைக்கு வர முக்கிய காரணமாக இருந்தது டான்ஸ் தான். நான் ஒரு மணி நேரம் டான்ஸ் ப்ரோக்ராம் ஒன்று பண்ணேன். அதை பார்த்துவிட்டு மலையாள இயக்குனர் வினயன் என்னை படத்தில் நடிக்க கூப்பிட்டார்".
"அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை, கதாநாயகியின் தங்கையாக நடித்து இருந்தேன்.
அந்த படத்தை பார்த்த இயக்குனர் பிரபு சாலமோன் என்னை கும்கிபடத்தில் நடிக்க அழைத்தார்" என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.