69 வயதான நடிகை லட்சுமி மரணமா? வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை லட்சுமி. மண்வாசனை படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது 69 வயதில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
யானை லட்சுமி
இந்நிலையில் நடிகை லட்சுமி இன்று காலை மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இறந்தது புதுச்சேரியை சேர்ந்த கோவில் யானை லட்சுமி. இதனை பலர் நடிகை லட்சுமி தான் இறந்துவிட்டதாக செய்திகளை பரப்பி வந்தனர். இதுகுறித்து நடிகை லட்சுமி கூறியது, இன்று காலையில் இருந்து எனக்கு பலரிடம் இருந்து போன் கால் வந்தது. பிறந்தநாள் கூட இல்லையே ஏன் கால் வருகிறது என்று விசாரிக்கையில், நடிகை லட்சுமி இறந்துட்டாங்க என்ற ஒரு செய்தி போயிட்டிருந்தது.
முற்றுப்புள்ளி
பிறந்தால் இறக்கத்தான் செய்ய வேண்டும் இதுக்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை கவலையும் படப்போவதில்லை. வேலை வெட்டியில்லாதவங்க இதை பரப்பிட்டு இருக்கங்களேன்னு நினைக்கும் போது அவங்க திருந்தவே மாட்டாங்கன்னு தோணுது. நான் ஆரோக்கியமாக, கவலையும் இல்லாமல் கிறிஸ்மஸ், புது வருடத்துக்காக ஷாப்பிங் செய்ய வந்தேன் என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார் நடிகை லட்சுமி.
