12 ஆண்டுக்கு பின் கம்பேக் கொடுக்கும் அஜித் பட நடிகை..ஆள் அடையாளம் தெரியவே இல்ல...
90ஸ் காலக்கட்டத்தில் அடுத்தடுத்து படவாய்ப்புகலை பெற்று டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியங்கா உபேந்திரா. விஜயகாந்த், அஜித், விக்ரம், அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்தார் பிரியங்கா. ரஜினியின் கூலி படத்தில் நடித்த பிரபல நடிகர் உபேந்திராவின் காதல் மனைவிதான் பிரியங்கா.

பிரியங்கா உபேந்திரா
உபேந்திராவை திருமணம் செய்தப்பின் தன்னுடைய பிரியங்கா திரிவேதி என்ற பெயரை மாற்றிக்கொண்டார். கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா, 1997ல் வெளியான ஜோதா என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்தார். தமிழில் 2002ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அஜித்தின் ராஜா படத்தில் தயிர் சாதம் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரியா ரோலில் நடித்தார் பிரியங்கா. இதன்பின் விக்ரமுடன் காதல் சடுகுடு, ஐஸ் என்ற படத்திலும் நடித்தார்.

உபேந்திராவுடன் திருமணம்
தெலுங்கில் உபேந்திராவுடன் ரா என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அதன்பின் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய பிரியங்கா, 2024ல் கவுரி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 12 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் 21 என்ற இந்தி படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

அதில் கேர் டேக்கர் வேடம் ஏற்று நடித்து வருகிறார். அப்படத்தின் அவரின் லுக் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனைபார்த்த பலரும் ஆளே மாறிட்டாங்களே என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.