4 வருஷத்துக்கு பின் விஜய் சேதுபதிக்கு ஸ்ருதி ஹாசன் செய்த செயல்..
தென்னிந்திய சினிமாவில் பல திறமைகளுடன் சினிமாத்துறையில் எண்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி நடித்த டிரெய்ன் படல் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக கன்னக்குழிக்காரா என்ற பாடலை பாடியுள்ளார். ஸ்ருதி ஹாசனின் தனித்துவமான குரலில் எளிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் மனதை ஈர்த்துள்ளது கன்னக்குழிக்காரா பாடல். இயக்குநர் மிஸ்கின் இயக்கி இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு கபிலன் வரிகளை எழுதியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இப்படம் படுமோசமான தோல்வியை கண்டது.

லாக்டவுன் சமயத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்ததால் ஷூட்டிங்கை விட்டே சென்றிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
இந்த சம்பவம் அப்போது பேசுபொருளானதை அடுத்து, விஜய் சேதுபதிக்காக டிரெய்ன் படத்தில் நடித்தும் ஒரு பாடலுக்கு பாடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.