அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க!! ஓபனாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்..

Gossip Today Tamil Actress Actress
By Jai Jul 17, 2026 07:24 AM GMT
Report

லதா ராவ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை லதா ராவ். இவர் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க!! ஓபனாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்.. | Actress Latha Rao Opens Up Adjustment In Film

லதா ராவ், ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசிய லதா ராவ் சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார்.

அதில், எனக்கு எது தவறு சரி என்பதை 15 வயதில் என் அம்மா சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் என்னோட 2 வயது குழந்தைக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்கும் ஒருநிலை உருவாகிவிட்டது. குழந்தைகளை வளர்க்கும் கடமை தாய்க்கு மிகப்பெரிய பொறுப்பாக மாறியுள்ளது.

அட்ஜெஸ்ட்மெண்ட்

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாமல் இல்லை. ஒவ்வொருத்தர் இருப்பதை பொருத்துத்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனையுள்ளது.

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க!! ஓபனாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்.. | Actress Latha Rao Opens Up Adjustment In Film

தயாரிப்பாளரும் இயக்குநரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டால் அதை தவிர்க்கலாம். என்னிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என கேட்டார்கள். என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் சில பட வாய்ப்புகளையும், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளேன் என்று சில வருடங்களுக்கு முன் நடிகை லதா ராவ் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.