கமலால் வாழ்க்கை இழந்த நடிகை மாதவி!! சாமியாரிடம் போகச்சொன்ன ரஜினிகாந்த்..
நடிகை மாதவி
300 படங்களுக்கும் மேல் நடித்து பெரியளவில் பேசப்பட்ட நடிகை மாதவி, சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டினார்.
கமல் ஹாசனுக்கும் நடிகை மாதவிக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தோன்றியது. அதற்கு காரணம் அவர் படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சியும் பிகினி ஆடையுடன் நெருக்கம் தான் காரணமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார் மாதவி. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் மாதவி.
ரஜினிகாந்த் அட்வைஸ்
அப்போது ரஜினிகாந்த் இமயமலையிலுள்ள தன்னுடைய குருநாதர் ஒருவரை போய் சந்திக்கும்படி ஆலோசனை கூறி அதன்படி அங்கு சென்றாராம் மாதவி. பின், அந்த குரு மாதவியிடம், உடனடியாக மாதவியை வெளிநாட்டில் தொழில் ஆரம்பித்து நஷ்டத்தை சந்தித்து இமயமலைக்கு வந்த வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கை காட்டினாராம்.
உடனே மாதவியும் குருநாதர் பேச்சை நம்பி திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இந்த திருமணத்திற்கு பிறகு உன்னால் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இந்தியா பக்கமே வர முடியாது கூறியதால், அவரை திருமணம் செய்து கொண்டு இன்றளவும் இங்கு தலைக்காட்டவில்லையாம்.
தற்போது 3 மகள்களுக்கு தாயாக அங்கேயே செட்டிலாகிவிட்டார் மாதவி. இன்றும் தனக்கு சோர்வாக இருந்தால் ரஜினியிடம் தான் ஆலோசனை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.