அந்த ஆளு கூட பேசக்கூடாதுன்னு நினைச்சேன்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா..

Serials Tamil TV Serials Actress G. Marimuthu Ethirneechal
By Edward Apr 05, 2025 01:30 PM GMT
Report

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.

அந்த ஆளு கூட பேசக்கூடாதுன்னு நினைச்சேன்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. | Actress Madhumitha Open Late Actor Marimuthu

கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார். தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். 26 வயதை எட்டியுள்ள நிலையில், அய்யனார் துணை சீரியல் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மதுமிதா

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் மறைந்த நடிகர் மாரிமுத்து பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில், முதல் நாள் முதல் காட்சி ஷூட்டிங்கில் அவருக்கும் எனக்கு சண்டையானது.

அதனால், ஆரம்பத்தில் அந்த ஆளு கூட தேவையில்லாம பேசக்கூடாதுன்னு இருந்தேன். அதன்பின் போகப்போக சரியாகி பேசிவிட்டேன். எனக்கு இதை பண்ணு என்று சொல்லி உதவுவார் என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.