தம்பி ரோஸ்க் பில்க் வாங்கி தரேன்டா!! ரொமாண்டிக் சீன் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி..

Ravindar Chandrasekaran Mahalakshmi Actress
By Jai Aug 30, 2023 02:30 PM GMT
Report

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

மகனுடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி இடையில் சீரியல் நடிகை ஈஸ்வருடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். ஈஸ்வரின் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.

அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது.

விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். கிட்டத்தட்ட திருமணமாகி ஒரு வருடம் ஆகும் நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சேலையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் மகாலட்சுமி.

தற்போது மெர்சல் படத்தில் சமந்தா - விஜய்யின் ரோஸ்க் மில்க் காட்சியை ரீல்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.