திருமணமாகி ஒரே வருடத்தில் மனைவியை பிரிந்துவிட்டாரா ரவீந்தர்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த மகாலட்சுமி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது, டின்னர், கோவில் என்றும் ரொமான்ஸ் செய்வதுமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இப்படி சென்றிருக்கையில், ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களி மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இப்படியொரு பதிவினை பகிர்ந்த ரவீந்தர் மனைவியை பிரியவுள்ளார் விவாகரத்து என பல வதந்திகள் பரவி அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை மகாலட்சுமி.