நடிகருடன் 33 வயது வித்தியாசம்.. நடிகை மாளவிகா கொடுத்த தக் ரிப்ளை

Mohanlal Malavika Mohanan Actress
By Bhavya Apr 07, 2025 01:30 PM GMT
Report

மாளவிகா மோகனன் 

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படம் மாளவிகாவுக்கு சரியான படமாக அமையவில்லை, பின் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார், ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.

கடந்த வருடம் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார், அந்த படத்தாலும் அவர் பெரிய அளவில் ரீச் பெறவில்லை.

நடிகருடன் 33 வயது வித்தியாசம்.. நடிகை மாளவிகா கொடுத்த தக் ரிப்ளை | Actress Malavika Mass Reply To Her Fan

தற்போது சர்தார் 2 படத்தில் பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையே 33 வயது வித்தியாசம் இருப்பதால் இணையத்தில் பல டிரோல்கள் எழுந்தன.

தக் ரிப்ளை 

இந்நிலையில், ரசிகர் ஒருவர் இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதிற்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்ப அதற்கு நெத்தியடி பதிலளித்துள்ளார் மாளவிகா.

அதில், "அப்படி உங்களிடம் யார் கூறியது? எதுவும் தெரியாமல் ஒரு நபரையோ, படத்தையோ மதிப்பிடுவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  

நடிகருடன் 33 வயது வித்தியாசம்.. நடிகை மாளவிகா கொடுத்த தக் ரிப்ளை | Actress Malavika Mass Reply To Her Fan