சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி.. 43 வயதான நடிகை மாளவிகா மேனனா இது.. லேட்டஸ்ட் போட்டோஸ்..

Rajinikanth Malavika Deva
By Edward Nov 21, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உன்னை தேடி என்ற படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மேனன். இதனை அடுத்து ஆனாந்த பூங்காற்ரே, ரோஜாவனம், சீனு, லவ்லி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, திருட்டு பயலே போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திருமணம்

க்ளாமரில் ரசிகர்களை மிரட்டி நடித்து வந்த மாளவிகா வாளமீனுக்கும் என்ற அஞ்சாதே படத்தின் மூலம் மிகப்பெரியளவில் பிரபலமானார். அதன்பின் வாய்ப்புகள் குறைய திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளை பெற்ற மாளவிகா, உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட மாளவிகா கிளாமரில் 43 வயதில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ரீஎண்ட்ரி

கோல்மால் படத்தில் 10 வருடத்திற்கும் மேல் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா மேனன், இசையமைப்பாளர் தேவாவின் கச்சேரிக்கு சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவா நடத்திய இசைக்கச்சேரிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாளவிகா கலந்து கொண்டு சூப்பர்ஸ்டாருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் கிளாமர் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.