தி ராஜா சாப் பட நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் வந்த மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள்..
Malavika Mohanan
Prabhas
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Jai
மாளவிகா மோகனன்
இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.
தற்போது தி ராஜா சாப், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் நடித்த தி ராஜா சாப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தி ராஜா சாப்
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் படக்குழுவினருடன் நடிகை மாளவிகா மோகனனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.