வீட்டில் இப்படி தான் இருப்பேன்! லுங்கியுடன் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

Malavika Mohanan Master
By Edward Jul 05, 2022 05:58 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள மாடலாக பட்டம் போலே என்ற படத்தின் மூலம் நடிகையாகி நிர்ணயம், நானும், மட்டு வரலக்சுமி, பிஹைந் தி கிளவுட்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கை ரோலில் நடித்தார். இதையடுத்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். படத்தில் போதி வரவேற்பு பெறாததால் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை பெற்றார்.

பின் தனுஷ் நடிப்பில் பிளாப் படமாக கருதப்பட்ட மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு சுத்தமாக செட்டாகவில்லை என்று விமர்சனத்தை சந்தித்தார். சமீபத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த மாளவிகா மோகனன் இந்தி பாப் சிங்கர் பேட் ஷா-வின் ஆல்பம் பாடலுக்கு படுமோசமாக ஆடி கவர்ந்திழுத்தார்.

இந்நிலையில் தனது வீட்டில் இப்படி தான் இருப்பேன் என்பது போல் மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.