3 மணிக்கு கால் செய்து படுக்கைக்கு பலர் அழைக்கிறார்கள்!! 46 வயது கமல் பட நடிகை ஒப்பன் டாக்
இந்திய சினிமாவில் பிரபலமானதை அடுத்து சீன திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நட்கை மல்லிகா ஷெராவத். ஜாக்கி சானுடன் தி மித் படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமாகிய மல்லிகா பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மல்லிகா ஷெராவத். அதன்பின் சிம்புவின் ஒஸ்தி படத்தில் கலாசலா கலாசலா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
அப்படி கவர்ச்சியில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்த மல்லிகா, சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கரண் சிங் கில் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் பிரென்ச் தொழிலதிபருடன் டேட்டிங்கில் இருந்தும் வந்தார்.
தற்போது 46 வயதாகும் மல்லிகா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.
அதில், பல நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்து உள்ளார்கள். அதிகால 3 மணிக்கு கூட அழைப்புகள் வரும், நான் சினிமாவில் மட்டுமில்லாமல் கவர்ச்சியான எனது உடலை காட்டுவதால் அதையே காரணமாக வைத்து பலர் படுக்கையறைக்கு அழைப்பது வேதனை அளித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்றும் என்னை இனி யாரும் அப்படி படுக்கைக்கு அழைத்தால் காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்றும் பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.

