4 திருமணம் செய்தவருடன் 17 வயதில் திருமணம்!! ஏமாற்றிய கணவரால் வெறுத்துப்போன நடிகை..
பேபி மஞ்சு
1979ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியாகி கிளாசிக் என கொண்டாடப்படும் படம் தான் உதிரிப்பூக்கள். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் பேபி மஞ்சு. மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும் சில படங்களில் ஹீரோயினாகவும், பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானார் மஞ்சு.

சித்தி, தீபம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனையடுத்து கன்னட நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். டைகர் பிரபாகர் ரஜினிகாந்தின் முத்து படத்தில் போலீஸ் ரோலில் நடித்திருப்பார். 17 வயது இருக்கும்போது நடிகை மஞ்சு 48 வயதான டைகர் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத துயரங்கள் நிகழ்ந்தது.

அவருக்கு 4வது மனைவி
மஞ்சு அளித்த பேட்டியொன்றில், எனக்கு அப்போது 17 வயது. அதை கல்யாணம் என்று சொல்ல முடியாது. அவருடன் ஒன்றரை வருடங்கள் இருந்தேன். குழந்தை பிறந்து 3 மாதத்தில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரிந்தது. பின் பெரிய பிரச்சனை வெடித்தது. இனி நான் உங்கள் பேச்சை கேட்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்.

நான் அவருக்கு 4வது மனைவி, அது எனக்கு தெரியவே தெரியாது. அவர் வீட்டுக்கு சென்றப்பின் தான் அவருக்கு திருமணம் நடந்தது, என்னைவிட வயதில் மூத்த 3 மகன்களுக்கு அவர் தந்தையாக இருந்தார் என்பதும் தெரிந்தது. அப்போது என்னிடம் ஒரு பையன் வந்து நான் வினோத், டைகர் பிரபாகர் என் தந்தை என்று கூறியபோது எனக்கு ஷாக்கானது.
என் கணவரிடம் கேட்டதற்கு என் மகன் தான் என்றார். அவர்கள் என்னைவிட மூத்தவர்களாக இருந்தனர். அது எனக்கு மிகவும் அப்செட்டாக்கிவிட்டது. அப்போது அவரிடம், உங்களை நான் வெறுத்துவிட்டேன், இனி பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன் என்று கூறினார். அதன்பின் நடிகை மஞ்சு, ஓ.ஏ. கே சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.