இரண்டாவது திருமணமா? நடிகை மீனா வேதனை.. ரொம்ப மோசம்!
மீனா
சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மீனா.
என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
மீனா என்று சொன்னாலே மக்கள் அனைவருக்கும் எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், சிட்டிசன் போன்ற படங்கள் தான் நியாபகம் வரும்.
மீனா பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகர் சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இரண்டாவது திருமணமா?
இந்நிலையில், இரண்டாம் திருமணம் வதந்தி குறித்து மீனா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " மற்ற நடிகர்களுடன், குறிப்பாக எனது கணவரின் மறைவுக்குப் பின், என்னை பற்றி பரவும் செய்திகள் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்தது. எனது இரண்டாவது திருமணம் குறித்து பொய்யான செய்திகள் பரவுவது கடினமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.