ரவீனா அப்படி செஞ்சதால் தான் ரெட் கார்ட் போட்டாங்க!! சின்னத்திரை சங்க தலைவர் பரத்..
ரவீனா தாஹா
சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் பிக்பாஸ் பிரபலமாகவும் திகழ்ந்து வரும் நடிகை ரவீனா தாஹா மீது, சின்னத்திரை சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் நடிக்கக்கூடாது என்று ரெட் கார்ட் போடப்பட்டது.
அந்த சமயத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்காக தேர்தலின் போது அவருக்கு ஓட்டுப்போட தகுதியில்லை என்று வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரியளவில் பேசப்பட்டது. இதுகுறித்து தமிழ் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நடிகர் பரத் பேசியுள்ளார்.
ரெட் கார்ட்
அதில், எனக்கு சில நாட்களுக்கு முன் எனக்கு கால் செய்து பேசினார். அவர் பற்றி பெரியளவிலான சர்ச்சை எல்லாம் இல்லை. ஒரு சீரியலில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் கமிட்டாகி பின் பிரமோ வீடியோவுக்கு பின் வெளியேறியதால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து புகார் வந்தது. முதலில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தான் ரெட் கார்ட் போட்டது.
5 சங்கத்தில் இருந்து எங்களிடம் புகார் வந்தது. தயாரிப்பாளர் சைட் மற்றும் ரவீனா சைடில் இருந்தும் பேசினோம். தயாரிப்பாளர் தரப்பில் எடுத்து வைத்தது சரியாகவும் ரவீனா தரப்பில், கதை வேறுமாதிரியாக போகிறது என்ற காரணத்தை கூறி நடிக்கமுடியாது என்று சொன்னார்.
இதனால் சீரியலின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பதால் 2 வருடம் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட் கார்ட் போட்டனர். கூட்டமைப்பு மூலம் அவரை நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அனுமதி வாங்கி அவருக்கு உதவி செய்தோம்.
இதுகுறித்து நேரில் வந்து பார்க்கவும் இருக்கிறோம். ரெட் கார்ட் போட்டதால், அவரை தடை செய்திருக்கிறோம். அதனால்தான் அவரால் ஓட்டுப்போட முடியாது என்று நடிகர் பரத் விளக்கம் கொடுத்துள்ளார்.