திருமணம் செய்யாமல் தாயான தமிழ் நடிகை!! இவரது மகள் பாலிவுட் ஸ்டார் நடிகை..
தென்னிந்தியாவில் பிறந்து பாலிவுடி சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஹேம மாலினி, ரேகா, வைஜெயந்திமாலா, ஜெயபிரதா, ஸ்ரீதேவி போன்றவர்கள் இருந்தார்கள். இவர்களில் நடிகை ரேகா கொஞ்சம் வித்தியாசமானவர். ரேகாவின் அம்மா புஷ்பவள்ளி, ஜெமினி கணேசனை திருமணம் செய்யாமலே இரு குழந்தைகளுக்கு தாயானார்.
நடிகை புஷ்பவள்ளி
அவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ரேகா. சம்பூர்ண இராமாயணம் என்ற படத்தில் சீதயாக நடித்து புகழ்பெற்ற புஷ்பவள்ளி, அப்படத்திற்காக 300 ரூபாய் சம்பளம் வாங்கினார். 1936 வெளியான இப்படத்திற்கு பின் 1942ல் மிஸ் மாலினி படத்தில் நடித்தார்.
இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் பெறவில்லை. இதனையடுத்து புஷ்பவள்ளி, தனது சினிமா வாழ்க்கையைவிட, தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அதிக பேசப்பட்ட நடிகையானார். 1940ல் திருமணம் செய்து 6 ஆண்டுகளில் கணவரை பிரிந்தார்.
ரேகா
மிஸ் மாலினி படத்தில் புஷ்பவள்ளி, கதாநாயகியாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் ஜெமினி கணேசன், புஷ்பவள்ளியை கடைசி வரை திருமணம் செய்யாமல் ரேகா மற்றும் ராதா என்ற இரு மகள்களுக்கு அப்பாவானார். 1991ல் புஷ்பவள்ளீ மரணமடைந்தார்.
அவருக்கு பின் ரேகா 12 வயதில் ரங்குல ரத்னம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்ற நட்ச்த்திரமாக மாறினார். 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். பின் அப்படம் தோ ஷிகாரி என்று பெயர் மாற்றப்பட்டது.
புஷ்பவள்ளியின் வாழ்க்கையை போலவே, ரேகாவின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை திருமணம் செய்த ஒரு ஆண்டில் கணவரை இழந்தார். இருப்பினும் அவர் பாலிவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்து தனக்கென ஒரு மரியாதையை பெற்றார் நடிகை ரேகா.