கணவர் இறந்து நான்கே மாதத்தில் இரண்டாம் திருமணம்!! விளக்கம் அளித்த நடிகை மீனா..

Meena Gossip Today Indian Actress Marriage
By Edward Dec 03, 2022 06:15 AM GMT
Edward

Edward

Report

கொரோனா முடிந்த நேரத்தில் மிகவும் ஷாக்கான தகவலாக இருந்தது நடிகை மீனாவின் கணவர் இறப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவருக்கு கிட்னியில் பிரச்சனை ஏற்பட சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவரின் உடல்நிலை படு மோசமாக செல்ல உயிரிழந்தார். அவரது இறப்பில் இருந்து மீண்டுள்ள மீனாவிற்கு அவர்களது பெற்றோர்கள் மறுமணம் செய்ய விரும்பியதாகவும் நடிகையும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனது இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனாவே விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.