அமெரிக்காவில் செட்டிலான நடிகருடன் இரவு விருந்து!! நடிகை மீனா வெளியிட்ட வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் மீனா மற்றும் குஷ்பூ. தற்போது ஒரு நடிகருக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள செய்தி சமுகவலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அந்த நடிகர் வேறுயாரும் இல்லை நடிகர் நெப்போலியன் தான். சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் தனுஷின் உடல் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு அங்கேயே செட்டிலாகி பிஸினஸ், அரசியல் என்று ஈடுபட்டு வந்தார்.
அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் அவரது வீடு சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நெப்போலியன் தன்னுடைய 60வது பிறந்தநாளை கடந்த 2 ஆம் தேதி கொண்டாடிய பிரபலங்கள் உட்பட பலருக்கு பார்ட்டி வைத்திருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நடிகை மீனா மற்றும் நடிகை குஷ்பூவும் சென்றிருக்கிறார். பல ஆண்டு நண்பருக்காக அமெரிக்காவுக்கு பறந்து சென்று வாழ்த்து கூறியதோடு அவர் அளித்த இரவு விருந்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்பட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்தும் அங்கு கிறிஸ்மஸ் மரத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை மீனா.