நுரையீரல் பாதிப்பால் நடிகை மீனாவின் கணவர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

Meena Indian Actress Relationship
By Edward Jun 28, 2022 07:24 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் நடிகையாக வளம் வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாகநடித்து அதன்பின் அவருக்கே ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா.

2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதை நிறுத்தினார். நைனிகா என்ற பெண் குழந்தையை நடிகர் விஜய்யின் தெறி படத்தில் நடிக்க வைத்தார். சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்தார்.

நுரையீரல் பாதிப்பால் நடிகை மீனாவின் கணவர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம் | Actress Meenas Husband Passes Away Breaking News

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Gallery