அம்மா இறந்தப்பின் நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்கணும்!! வைரலாகும் மீரா மிதுன் வீடியோ..
மீரா மிதுன்
இணையதளம் வழியாக பலர் பிரபலமாகிவிடலாம் என்று என்னென்னவோ செய்து சர்ச்சையில் சிக்கியும் விடுவார்கள். அப்படி சர்ச்சைக்கே பேர் போன நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை மீரா மிதுன்.
மாடலிங் துறையில் இருந்து கேரியரை தொடங்கிய மீரா மிது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீம்ஸ் மெட்டீரியலாகினார். அவர் செயல்பாடுகளை பலரும் கலாய்த்து வந்ததை அடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.
முதலமைச்சர் ஆகியிருக்கணும்
இந்நிலையில் மீரா மிதுனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது. அந்த வீடியோ, ஜெயலலிதா அம்மா மறைவுக்குப்பின் மத்திய அரசு என்னைத்தான் முதலமைச்சராகச் சொன்னார்கள்.
ஆனால் நான் தான் முதலமைச்சர் ஆகிவிட்டால் ஒரு கட்டத்திற்குள் இருப்பதைப்போல் ஆகிவுடும். மக்களோடு மக்களாக இருக்க முடியாது என முடிவு செய்து கட்டியில் இருந்த மற்றொருவரை சிபாரிசு செய்து முதலமைச்சராக்கினேன்.
இது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும். ஆனால் நான் அமைதியாக இருக்க காரணம் அவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொல்லவேண்டும் என்பதுதான். நான் செய்த தவறு நான் அப்போது முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டும் என்று அவர் கூறிய வீடியோ தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி டிரெண்ட்டாகி வருகிறது.