விவாகரத்தாகி 25 ஆண்டுகள்!! ராமராஜன் - நளினி மீண்டும் இணைய முடிவா?
நளினி - ராமராஜன்
தமிழ் சினிமா எம் ஜி ஆர் திருமணம் செய்து வைத்த ஜோடிகளான ராமராஜன் - நளினி தம்பதியினர் கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும் பிள்ளைகளுக்காக நட்பாக பழகி வருகிறார்கள். இருவருக்கும் விவாகரத்தாகி 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ராமராஜன் - நளினி இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சோபிதா ஜோசப்
பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப் அளித்த பேட்டியொன்றில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நளினி கூட, கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார். ஆனால் காமராஜன் நடித்தால் ஹீரோதான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாமானியன் படம் 40 நாட்கள் ஓடியது, பெரிய விஷயம் தான்.
நளினி - ராமராஜன் இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள் என்று வெளியான தகவல் உண்மை இல்லை. இவர்கள் இருவரும் இனிமேல் இணைந்து ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு விட்டுவிட்டு, இப்போது இணைந்தால் இப்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள் என்ற கேள்வி வரும். அதற்கு இருவருமே பதில் சொல்ல வேண்டும்.

எதற்காக இப்படியொரு நிலை வரவேண்டும், இருவருக்கும் புரிதல் இருக்கிறது. அப்படியே இருந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள். திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது. இனிமேல் நளினி என்ன சாமியாராகவா போகப்போறாங்க?.
நடிகையாக இருந்து கொண்டு சாமியராக போகிறேன் என்று சொன்னால் அனைவரும் அவரை நடிகையாகத்தான் பார்ப்பார்கள். சாமியாராக பார்க்கமாட்டார்கள். ராமராஜன் - நளினி இருவருக்கும் நண்பர்களாக இப்போதும் இருக்கிறார்கள் என்று சோபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.