கர்ப்பமாக இருக்கும் போதே இறந்த கணவர்.. இரண்டாம் திருமணமா ஷாக் கொடுத்த மேக்னா ராஜ்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மேக்னா ராஜ். தமிழில் உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்திருந்தார். மலையாள முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த மேக்னா ராஜ் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனின் உறவினரை திருமணம் செய்து கொண்டு படங்களிலும் நடித்து வந்தார் மேக்னா. இதன்பின் திருமணமாகி இரண்டு வருடத்திலேயே கணவர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணமடைந்தார். சிறுவயதிலேயே சிரஞ்சீவி மரணம் இந்திய திரையுலகை அதிர வைத்தது.

சிரஞ்சீவி சாகும் போது மேக்னா கர்ப்பிணியாக இருந்திருந்தார். அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு ஆண் குழந்தையை பெற்றெடுத்து உருக்கமான பதிவுகளை பகிர்ந்து வந்தார். இப்படி சென்று கொண்டிருக்கையில் மேக்னா அதிலிருந்து மீண்டு வந்தது போட்டோஷூட் பக்கம் சென்றார்.
இதை வைத்து மேக்னா ராஜ் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் பரவி வைரலானது. தற்போது தன் மகனின் எதிர்காலத்தை குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவரது கையில் கணவர் சிரஞ்சீவியின் முதல் இரண்டு எழுத்து Chiru மற்றும் மகன் பெயர் ராயன் ஆகியோரின் பெயரை பச்சைக்குத்தி அதை பதிவிட்டுள்ளார்.