உன் அப்பா இவர் தான்? கருவில் இருக்கும் போது இறந்த மகனுக்கு போட்டோவை காட்டி உருக வைத்த நடிகை
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மேக்னா ராஜ். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த மேக்னா கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய இரு வருடத்தில் மேக்னா கர்ப்பமாக இருக்கும் போது அவரின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் மரணமடைந்தார்.
கன்னட சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி 39 வயதில் மரணமடைந்தது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. கணவர் இறந்த சில மாதங்களில் மேக்னா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதன்பின் கணவரை நினைத்து மகனை வளர்த்து வந்த மேக்னா, சிரஞ்சீவி இறந்து இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், இது தான் உன் தந்தை என்று மகனுக்கு கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உருவ வைத்துள்ளது.