திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பம்..இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை இறப்பு!! யார் இந்த நடிகை..
1999ல் கன்னடத்தில் வெளியான சந்திரமுகி ப்ரணசாகி படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை பாவனா ராமன்னா. கன்னடத்தில் கவனம் செலுத்தி வந்தவர் 1999ல் மோகன் இயக்கி நடித்த அன்புள்ள காதலுக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

இதன்பின் நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு போன்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார். இந்தியில் 2006ல் வெளியான ஃபேமிலி படத்தில் அமிதாப் பச்சன் மகளாக நடித்தார். கன்னட அரசின் மாநில விருதை சிறந்த நடிகைக்காக பெற்றார்.
40 வயதில் கர்ப்பம்
கடந்த ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பாவனா, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், நான் ஒரு தாய், இரட்டை குழந்தைகளுடன் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். மகிழ்ச்சியில் திளைக்கிறேன், என்னுடைய 20, 30 களிலும், தாய்மை என்பது என் மனதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

எனக்கு 40 வயதானபோது தாயாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. திருமணமாகாத பெண்ணாக, அந்த பாதை எளிதாக இருக்கவில்லை. பல IVF கிளினிக்குகள் என்னை அடியோடு நிராகரித்தது. ஆனால் பின் நான் பெங்களூரில் ஒரு மருத்துவரை சந்தித்தேன். அவர் எனக்கு ஆதரவளித்தார்.
முதல் முயற்சியில் நான் கருவுற்றேன். என் தந்தை, உடன் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் பெருமையுடனும் அன்புடனும் எனக்கு துணையாக நின்றனர்.

சிலர் என் முடிவை கேள்விக்குள்ளாக்கினார்கள் என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம், அன்பு நிறைந்த ஒரு வீட்டில் வளர்வார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை பாவனா ராமன்னா.
கடந்த ஆண்டு பாவனாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன, ஆனால் அதில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தது. குழந்தைக்கு ருக்மணி என்று பெயரிட்டுள்ளார். திருமணமாகாமல் குழந்தை பெற்று வளர்த்து வரும் பாவனாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.