முகத்தை பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறிய இயக்குநர்!! நடுங்கி போன நடிகை மெளனி ராய்...
மெளனி ராய்
தமிழக இளசுகளை சீரியல் பக்கம் ஈர்க்க வைத்த சீரியல்களில் ஒன்று தான் நாகினி. அந்த தொடரில் இருக்கும் பாம்புக்கென்றே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். வடமொழி தொலைக்காட்சி தொடர்களை தமிழில் டப் செய்து ஒளிப்பரப்பப்பட்ட சீரியலான நாகினி சீரியலில் நாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மெளனி ராய்.

அந்த சீரியல் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பால் வெள்ளித்திரை படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டும் பிரபலமானார் மெளனி ராய். சமீபத்தில் மெளனி ராய் அளித்த பேட்டியொன்றில் தான் படவாய்ப்பு தேடி அலைந்த போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அத்துமீறிய இயக்குநர்
அதில், வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு இயக்குநர் என்னிடம் கதை சொல்வதற்காக அழைத்தார். சுவாரசியமாக கதைச்சொல்லிக் கொண்டிருந்தார். ஒருக்கட்டத்தில் நீச்சல் குளத்தில் ஹீரோயின் விழுந்துவிட ஹீரோ அவரை காப்பாற்றுவார்.

அந்நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் வாயோடுவாய் வைத்து தண்ணீரை உறிஞ்சுகிறார் என்று சொல்லிக்கொண்டே, என் அருகில் வந்து எனக்கு முத்தம் கொடுத்து வரம்பு மீறி நடந்துக்கொண்டார்.
இயக்குநரின் வரம்பு மீறியலால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய்விட்டேன். என் உடல் நடுங்கத்தொடங்கியது. உடனே அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். அந்த மோசமான சம்பவத்திற்குப்பின் தனிமையில் கதை கேட்பதை தவிர்த்துவிட்டேன் என்று மெளனி ராய் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.