வைரலான நீச்சல் குள புகைப்படம்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ருக்மிணி வசந்த்...
ருக்மிணி வசந்த்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வந்த சில ஆண்டுகளில் டாப் நடிகையாக மாறியவர்தான் நடிகை ருக்மிணி வசந்த். காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்து வெற்றியை கண்ட ருக்மிணி, டாக்சிக், டிராகன் போன்ற பிரமாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை ருக்மிணி, நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் போட்டோஷூட் எடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ட்ரெண்டாகியது.
ஏற்கனவே AI மூலம் நடிகைகள் தவறாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கியதை எதிர்த்து பல நடிகைகள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ருக்மிணியின் அந்த நீச்சல் குள புகைப்படங்கள் AI மூலம் எடிட் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதனையறிந்த ருக்மிணி, விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

போலியானவை
அதில், என்னுடைய பெயரில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை. இது ஒரு தனிநபரின் தனியுரிமையை சீர்குலைக்கும் கடுமையான விதிமீறல்.
போலிப்புகைப்படங்களை உருவாக்கியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் மீது சைபர் கிரைம் போலிசாரிடம் சட்டப்பூர்வமாக புகாரளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ருக்மிணி வசந்த்.