ஒரே ஒரு படம் கொடுத்த வாய்ப்பு!! பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை மிருணாள் தாகூர்
Mrunal Thakur
By Edward
மராத்தி சினிமாவில் அறிமுகமாகி இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணால் தாகூர். கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் மிருணாள்.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து அனைத்து இளசுகளின் கனவுக்கன்னியாக மாறினார். அடக்கவுடக்கமான சீதாவான நடித்த மிருணாள், சமீபத்தில் பிகினி ஆடையில் வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார்.

தற்போது, இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 33 கோடி ரூபாய் அளவிற்கு மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு இருப்பதாகவும் ஒரு படத்திற்கு ஒரு கோடி அளவில் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றிற்கு சுமார் 6 கோடி அளவில் சம்பளம் வாங்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.