முதல் மனைவி மரணம்!! 39 வயது நடிகையுடன் லிவ்விங் வாழ்க்கை வாழும் அஜித் பட வில்லன்...
முக்தா கோட்சே
மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்து மாடல்துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகை முக்தா கோட்சே. 2002ல் மிஸ் கிளாட்ராக்ஸ் மெகா மாடல் பட்டத்தை வென்று 2008ல் பேஷன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதன்பின் ஆல் தி பெஸ்ட், ஜெயில், பெசுபன் இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடித்து வெளியான தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் காதலி ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய முக்தா, சர்மாஜி கி லாக் ஹை என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது கைவசம் 3 படங்களை வைத்துள்ள முக்தா, பிரபல நடிகர் ராகுல் தேவ்வுடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். ராகுல் தேவ், அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
ராகுல் தேவ்
ஜலந்தரை பூர்வீகமாக கொண்ட பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ராகுல் தேவ், 1998ல் ரீனா என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார்.
ரீனா கடந்த 2009ல் மரணமடைந்ததை அடுத்து, ராகுல் தன் மகனுடன் தனியாக வசித்து வந்தார். தற்போது முக்தா கோட்சேவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இருவருக்கும் கிட்டத்த 18 வயது வித்தியாசம் இருக்கும் என்றும் பலமுறை பொதுவெளியில் வெளிப்படையாக சுற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.