19 வயதில் சினிமாவில் எண்ட்ரி.. அந்த வேலை செஞ்சே கோடியில் சொத்து சேர்த்த நடிகை மும்தாஜ்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மும்தாஜ். 19 வயதில் டி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து மலபார் போலிஸ், குஷி படத்தில் அனிதாவா நடித்து கட்டிப்பிடி கட்டிபிடிடா பாடலில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். வெறும் கவர்ச்சியை கொண்டே இவர் நடித்ததால், முஸ்லிம் சமுகத்தில் இருந்து சில எதிர்ப்புகளும் வந்தது.
குத்து பாடல்களில் பட்டையை கிளப்பி நடித்து மும்தாஜுக்கு சரியான படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சுமார் 91 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்.
சுகாதாரத்தை பிக்பாஸ் வீட்டில் அமைத்துக்கொடுத்து நல்ல பெயரை வாங்கிய மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
கிளாமர் பாடல், காட்சிகளில் மட்டுமே நடித்து சுமார் 22 கோடி அளவில் சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறார் நடிகை மும்தாஜ். தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் தனிக்காட்டு கன்னியாக இருந்து வருகிறார்.