நடிகை நக்மாவா இது? 50 வயதிலும் குறையாத அழகு.. ஆளே மாறிய நடிகை
நக்மா
பாலிவுட் சினிமாவில் 1990ம் ஆண்டு சல்மான் கான் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவர் இயக்குநர் ஷங்கர் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அப்பட வெற்றியை தொடர்ந்து நக்மா பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து உயர்ந்தார்.
குறிப்பாக நக்மாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது ரஜினியின் பாட்ஷா திரைப்படம் தான். இவர் கடைசியாக போஜ்புரி மொழியில் நடித்ததோடு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணித்து வருகிறார்.
நக்மாவா இது?
இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா தனது மகள் தியா பள்ளியில் பட்டம் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அப்போது அவரது மொத்த குடும்பமும் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு எடுக்கப்பட்ட நக்மாவின் போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.