ரஜினி, கமல்-ஆ வேண்டவே வேண்டாம், எனக்கு பிடிக்கல!! 58 வயது நடிகை சொன்ன காரணம்
தமிழ் சினிமாவில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் ராணுவ வீரன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை நளினி. அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.
அதன்பின் நடிகர் ராமராஜனுடன் ஜோடியாக நடித்த நளினி அவரை காதலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அருணா, அருண் என்ற இரு பிள்ளை இருக்கும் நளினி, ராமராஜனுடன் இன்னும் நட்புடன் வாழ்ந்தும் பிள்ளைகளை இருவரும் சேர்ந்து கவனித்தும் வருகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குடும்பத்தை மீறி சினிமாத்துறையில் வந்த நளினிக்கு விஜயகாந்த் தான் பல படங்களில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நடிகை நளினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்காமல் இருந்துள்ளார். அப்படி என்ன தான் அவருடன் பிரச்சனை என்ற கேள்விக்கு பதிலளித்த நளினி, நிறைய படங்கள் கமிட்டாகி வெளியேறினாராம்.
இந்த நடிகரோட நடிக்கல, அந்த இயக்குனரோட படத்தில் நடிக்கல என்று எந்த ஃபீலும் இல்லை. என் பொழப்பு நடிப்பது தான். ரஜினி, கமல் படங்களில் நடித்து வெளியேறிவிட்டேன். அவரை தேடி, மாவீரன், தங்க மகன், கைக்கொடுக்கும் கை, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடிக்க சென்றும் பாதியில் வெளியேறிவிட்டேன்.
அதெல்லாம் பெரிய விசயமில்லை. அப்படி நிறை படங்கள் மிஸ் பண்ணி இருக்கேன். திரும்பி பார்த்தால் தானே என்று நளினி கூறியுள்ளார்.