நான் வேற லெவல் பத்தினி, குடும்ப குத்துவிளக்கு!! விவாகரத்து பற்றி ஓப்பனாக கூறிய பிரபல நடிகை நளினி...
80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நளினி. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ராணுவ வீரன் படத்தில் தன்னுடைய 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 50 படங்களில் நடித்து அனைவரையும் மிரம்மிக்க வைத்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து வந்த நளினி தன்னுடன் நடித்து வந்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார் நளினி.
ஆனால் இருவரும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கல்யாணத்திற்கு பின் நடிக்கவில்லையா என்ற கேள்விக்கு, அய்யோ, நான் வேற லெவல் பத்தினி, குடும்ப குத்துவிளக்கு நானு.
ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் நளினி திருமணத்திற்கு பின் கேமரா பக்கமே திரும்பமாட்டார் என்று கூறும் அளவிற்கு பேட்டி கொடுத்தேன் என்று சிரிப்புடன் கூறியிருக்கிறார்.
மேலும், விவாகரத்துக்கு பின் முதல் நாள் என்னை பற்றி தான் யோசித்தேன். அவரை மறக்க முடியுமா? அதற்கு பின் என்ன பண்ண போறேன்னு தெரியாது.
அவர் கேட்டார், கொடுத்தேன். 25 வருஷமாகிச்சி அதை இப்போதுதான் மறக்க ஆரம்பிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரை விட்டுவிட்டு வேறொருவரை வைத்து பார்க்கவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியது, எதுக்குங்க வெச்சிக்கணும், ஒன்று வெச்சிருந்ததே போதாதா என்று கூறியிருக்கிறார் நளினி.