பெண்கள்தான் தாலி அணியவேண்டுமா? ஆண்களுக்கு எதுவும் இல்லையா? நமீதா ஆவேசமான கருத்து...

Namitha Gossip Today Marriage Tamil Actress
By Jai Sep 08, 2026 07:00 AM GMT
Report

நமீதா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நமீதா, தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார்.

பெண்கள்தான் தாலி அணியவேண்டுமா? ஆண்களுக்கு எதுவும் இல்லையா? நமீதா ஆவேசமான கருத்து... | Actress Namitha Talks About Thali Women Men

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருமணமானதுமே கண்டிப்பாக பெண்கள்தான், தாலி அணிய வேண்டும் என்று பகவத் கீதையில் எழுதப்பட்டு இருக்கிறதா? இந்த விதிமுறைகள் ஏதேனும் வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ சொல்லப்பட்டு இருக்கிறதா? நிச்சயம் இல்லை. இ

ந்த சமூகம் தான் பெண்களுக்காக பல கட்டுப்பாடு விதிமுறைகளை உருவாக்கி வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு ஏன் இதில் எந்தக் கட்டுபாடும் இல்லை.

பெண்கள்தான் தாலி அணியவேண்டுமா? ஆண்களுக்கு எதுவும் இல்லையா? நமீதா ஆவேசமான கருத்து... | Actress Namitha Talks About Thali Women Men

வரலட்சுமி நோன்பை கணவனின் ஆயுளுக்காக, நலனுக்காக மனைவிதான் இருக்க வேண்டும் என்கிறார்கள். சரி மனைவியாக நான் வருடத்திற்கு ஒருநாள் கணவருக்காக விரதமிருந்து நோன்பு இருக்கிறேன்.

ஆனால் கணவராக இருக்கும் ஒரு ஆண், வருடத்திற்கு இன்னொரு நாளாவது தன் மனைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விதிமுறை இச்சமூகத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. ஏன் அப்படியொரு விதியை உருவாக்கவில்லை, ஏன் எல்லா விதிகளும் பெண்களை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது? என்று நமீதா பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.