திருமணமாகாமலும் சந்தோஷமா இருக்கலாம்!! 43 வயது நடிகை திவ்யா ஓபன் டாக்..
திவ்யா
கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் 20களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா. ஸ்பந்தனா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், போன்ற படங்களில் நடித்து வந்தார். 2010க்கு பின் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.

அதற்கு காரணம் அரசியலில் ஈடுபட்டும் இருந்தார். அதனையடுத்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். சமீபத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், திருமணம் மட்டுமே என் அடையாளத்தை தீர்மானித்துவிடாது. திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிக முக்கியம்.

நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை, ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும், ஆனால் எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை திவ்யா.