ரூ. 7000 கோடி சொத்துக்கு அதிபதி!! இந்தியாவின் பணக்கார நடிகை இவர் தான்..
பணக்கார நடிகை
இந்தியளவில் நடிகர்களுக்கு அடுத்து டாப் நடிகைகளின் சம்பளமும் சொத்து மதிப்பும் அதிகளவில் கவனிக்கப்படும். அப்படி இந்தியளவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா, ஆலியா பட் போன்ற நடிகைகளின் முகம் அனைவருக்கும் வரும்.

அதேபோல் தென்னிந்திய சினிமாவில் நயன் தாரா, சமந்தா, திரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தேடுவார்கள்.
ஜூஹி சாவ்லா
அவர்களையே மிஞ்சும் வகையில் ஒரு நடிகை 4 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து மதிப்பினை வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தான். சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற ஜூஹி ஐபிஎல் அணி, உம்ஸ்தா நிறுவனத்தில் பங்குதாரர், திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளர் போன்ற தொழில்கள் மூலம் சொத்துக்களை உயர்த்தி வருகிறார்.

தற்போது வாரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 7990 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர் ஜெய் மேத்தா தான் அவரின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்.

தன்னுடைய தொழில் பார்ட்னரும் தோழருமான நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து உருவாக்கிய வலுவான வணிக சாம்ராஜ்யத்தின் மூலம் இந்தியாவின் டாப் 1 பணக்கார நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஜூஹி.