படவாய்ப்பில்லை!! 39 வயதில் இன்ஸ்டா மூலம் காசு சம்பாதிக்கும் நடிகை பூனம்..
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சேவல் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. அறிமுகமான முதல் படமே, அதுவும் மொட்டை அடித்து நடிக்கும் பெண்ணாக நடித்து மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று பிரபலமானார் பூனம் பாஜ்வா.

இதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து வந்தார். பிஸியாக நடித்து வந்த பூனம் பாஜ்வா திடீரென வாய்ப்பில்லாமல் ஆளே காணாமல் போனார்.
அதன்பின் முத்தினக் கத்திரிக்காய் படத்தில் ஆண்டி ரோலில் நடித்து கவர்ச்சியை தூக்கலாக கட்டி நடித்திருந்தார். எப்படியாவது மீண்டும் உடல் எடையை குறைத்து படவாய்ப்பினை பெற்றுவிட வேண்டும் என்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார்.

பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியதோடு படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்தார் அவரின் கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதால் அதை வைத்து பூனம் பாஜ்வா வருமானம் பார்த்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஆண்கள் பொதுவாக பெண்களிடம் காஃபி குடிக்கலாமா என்று கேட்பார்கள். அவர்கள் அப்படி அழைப்பதற்கு பல விசயங்கள் இருக்கிறது. அது எனக்கு நன்ராகவே தெரியும் என்றும் அவர்கள் அழைத்தால் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் சர்ச்சையான ஒரு பதிவினை கூறி ஷாக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.