நிச்சயம் முடிந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை.. உண்மையை கூறிய நடிகை பூர்ணா
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். க்ளாமர் காட்சியிலும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சியிலும் நடித்து வந்த பூர்ணா. தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திடீரென மோதிர மாற்றி நிச்சயத்தை முடித்து புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். தற்போது நிச்சயத்தோடு நிறுத்திக்கொண்டுள்ளார் பூர்ணா.
திருமணத்தை நிறுத்திவிட்டீர்கள் அதர்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு பூர்ணா சமீபத்தில் பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அவரது சமுகவலைத்தளத்தில் வருங்கால கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு எப்போதும் என்னுடையவர் என்ற பதிவினை போட்டுள்ளார்.
திருமணம் நிறுத்தப்பட்டதாக வந்த செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பூர்ணா. விரையில் திருமணத்திற்கான திட்டமிட்டு நடைபெறவுள்ளதாம்.