படவாய்ப்பில்லை! சினிமாவுக்கு டாட்டா கூறி கல்யாணத்துக்கு ரெடியான நடிகை பூர்ணா

Indian Actress
By Jai Jun 02, 2022 06:05 PM GMT
Report

மலையாள நடிகைகளின் இறக்குமதி போகப்போக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் நிலையான ஒரு இடத்தினை பிடிக்க தவறவிடுகிறார்கள். நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பல ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடித்த சிலருக்கு கிடைக்காமல் போகிறது.

அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற பெயரில் அறிமுகமாகி சினிமாத்துறைக்கு பூர்ணா என்று பேர் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த பூர்ணா க்ளாமர் ரோலில் நடித்து சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார்.

சமீபத்தில் சிலர் தன்னை ஏமாற்றியதாகவும் புகாரளித்திருந்த நிலையில் துபாய் தொழிலதிபரான ஆசிப் அலியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் நிச்சயத்தை அறிவித்தனர்.

என் பெற்றோர்களின் ஆசியுடன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறேன் என்ற பதிவோடு புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், திருமணத்திற்கு பிறகு நடிப்பினை தொடர்வாரா இல்லையா என்பது போகப்போக தான் தெரியவரும்.