அட்ஜெஸ்மெண்டுக்கு அழைத்த காமெடி நடிகர்!! கேரவனில் சம்பவம் செய்த 49 வயது நடிகை..
நடிகை பிரகதி
தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பிரகதி.
பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகம், ஜெயம், கெத்து, பகீரா, எத்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரகதி, தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் கேரக்டர் ரோல் செய்து வருகிறார்.
49 வயதான பிரகதி அளித்த பேட்டியொன்றில், ஒரு மோசமான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
காமெடி நடிகர்
அதில் ஒரு காமெடி நடிகர் படப்பிடிப்பில் தன்னிடம் சிக்னல் காட்டி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லிக்கேட்டார். அப்போது நான் அவர் மீது கோபப்படவில்லை.. அப்போது ஏதாவது பேசியிருந்தால் படப்பிடிப்பு நின்றுபோயிருக்கும். அதனால் நாம் ஷூட்டிங் முடிந்த பின் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என அவரிடம் கூறினேன்.
மேலும் படப்பிடிப்பு முடிந்தப்பின் அந்த நடிகரை கேரவனுக்கு வரச்சொன்னேன். கேரவனுக்கு வந்த அவரிடம் நான் உங்களிடம் ஏதேனும் சிக்னல் கொடுத்தேனா அல்லது வேறு ஏதேனும் தவறாக நடந்து கொண்டேனா என்பது குறித்து கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை என்று பதிலளிக்க, நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது தவறு, நான் படப்பிடிப்பில் ஏதேனும் உங்களிடம் பேசியிருந்தால் அது உங்களுக்கு தவறாக புரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
அப்படி எதுவும் நடக்காதபோது ஏன் இவ்வளவு கீழ்த்தனமா நடந்து கொள்கிறீர்கள், இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா? இப்போது உங்களிடம் இதை மரியாதையுடன் சொல்கிறேன் என்று கூலாக டீல் செய்ததாக பிரகதி தெரிவித்துள்ளார்.